சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வடி விபத்து -உடனடியாக தொழிலாளர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வடி விபத்து -உடனடியாக தொழிலாளர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு....;

Update: 2025-09-03 14:45 GMT
G கணேஷ்குமார் விருதுநகர் 03.09.2025 சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வடி விபத்து -உடனடியாக தொழிலாளர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு.... சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குயில் பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வானில் வர்ண ஜாலங்கள் காட்டும் பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடித்து சிதறியதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் பீதி அடைந்தனர். வெடி விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் ஆலையை விட்டு அலறியடித்து வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதில் ஒரு அறை சேதம் அடைந்தது. சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News