வெடி விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளை பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்ற அஜித் ரசிகர்கள்
வெடி விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளை பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்று ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களில் விளையாடச் செய்து மகிழ்ச்சியடைய செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அஜித் ரசிகர்கள்.....;
சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளை பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்று ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களில் விளையாடச் செய்து மகிழ்ச்சியடைய செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அஜித் ரசிகர்கள்..... கந்தக பூமியான சிவகாசியில் தொடர் பட்டாசு ஆலை வெடி விபத்துக்களால் உயிரிழக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் வெம்பக்கோட்டையில் உள்ள தனியார் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. வெடி விபத்துகளில் பெற்றோரை பறிகொடுத்த பிள்ளைகளின் கவலையே போக்கி மகிழ்ச்சியில் ஆழ்தும் விதமாக சிவகாசியில் அஜித் ரசிகர்களால் உருவாகி பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் அன்பு தடம் என்ற தன்னார்வ இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெற்றோரை இழந்த 50க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியரை சிவகாசியில் நடைபெற்று வரும் பிரமாண்ட பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்று அங்கு ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு சாகசங்களில் இடம்பெறச் செய்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இரவு அறுசுவை விருந்தும் வழங்கியுள்ளனர். வெடி விபத்துக்களால் உயிரிழந்த தொழிலாளர்களின் பிள்ளைகளின் நீண்ட நாள் கனவான பொருட்காட்சியில் பங்கேற்க செய்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அஜித் ரசிகர்களின் செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.