சிவகாசியில் நடமாடும் பாஸ்போர்ட் முகாமில் பாஸ்போர்ட் எடுக்க ஆர்வம் காட்டிய பொதுமக்கள்.....பாஸ்போர்ட் பெற ஏஜெண்டை அணுகி ஏமாற வேண்டாம் என பாஸ்போர்ட் மண்டல அலுவலர் அறிவுறுத்தல்...
சிவகாசியில் நடமாடும் பாஸ்போர்ட் முகாமில் பாஸ்போர்ட் எடுக்க ஆர்வம் காட்டிய பொதுமக்கள்.....பாஸ்போர்ட் பெற ஏஜெண்டை அணுகி ஏமாற வேண்டாம் என பாஸ்போர்ட் மண்டல அலுவலர் அறிவுறுத்தல்...;
சிவகாசியில் நடமாடும் பாஸ்போர்ட் முகாமில் பாஸ்போர்ட் எடுக்க ஆர்வம் காட்டிய பொதுமக்கள்.....பாஸ்போர்ட் பெற ஏஜெண்டை அணுகி ஏமாற வேண்டாம் என பாஸ்போர்ட் மண்டல அலுவலர் அறிவுறுத்தல்... மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மதுரை மண்டல பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு ) அலுவலகத்தின் சார்பாக நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மண்டல அளவில் மூன்றாவது முகாமாக சிவகாசியில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் முகாம். நடைபெறுகிறது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லோருக்கும் எளிமையான முறையில் பாஸ்போர்ட் கிடைக்கச் செய்ய வேண்டுமென்ற நோக்கிலும், பாஸ்போர்ட் அலுவலகத்தை மக்கள் தேடி அலைந்துவந்த நிலையில், எந்தெந்த பகுதி வாழ் மக்களுக்கு பாஸ்போர்ட் தேவை உள்ளது என்பதையறிந்து பாஸ்போர்ட் வழங்கும் மொபைல் வேன் அந்தந்தப் பகுதியை நோக்கிப் பயணித்து வருகிறது. இடைத்தரகர்களின் தவறான வழிகாட்டுதலிலிருந்து மக்களை பாதுகாக்கவும், நேரம், செலவினம் ஆகினவற்றை விரயமின்றி, எளிய முறையில் ஒவ்வொருவருக்கும் பாஸ்போர்ட் கிடைக்க ச்செய்ய நடமாடும் பாஸ்போர்ட் சேவை செயல்படுத்தி வரப்படுகிறது. பாஸ்போர்ட் கேட்டு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தவர்களை நடமாடும் பாஸ்போர்ட் முகாமிற்கு நேரடியாக வரவழைத்து ஆவணங்களுடன் கூடிய விசாரணைகளை மேற்கொண்டு காவல் துறையின் மூலமாக விசாரணை நடத்தி முடித்தவுடன் உடனடியாக வீடு தேடி பாஸ்போர்ட் கிடைக்கச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்த், இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி வரும் இந்த காலகட்டத்தில் மக்கள் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி தேடியும், சுற்றுலாவுக்கும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் மட்டும் ஒவ்வொரு மாதமும் 33 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டு 3- லட்சம் பேர் தங்களுக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டு )மென கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். பாஸ்போர்ட் பெறுவதில் எதிர்காலத்தில் எந்த விதமான பிரச்சினையுமின்றியிருக்க இடைத் தரகர்களை அணுகாமல் நேரடியாக பாஸ்போர்ட் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகரிக்கும் பொருட்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்ய வேண்டு மென்ற மத்திய அரசின் நோக்கத்திலும் மொபைல் வேன் மூலம் பாஸ்போர்ட் வழங்கும் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும், கல்லூரிகளிலும் இது போன்ற முகாம் நடத்த ஆவணம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். பேட்டி:-வசந்த்- மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர்.