விருதுநகர் அருகே வாகன சோதனையில் ஐந்து கிலோ கஞ்சா பறிமுதல் மூன்று பேர் கைது*

*விருதுநகர் அருகே வாகன சோதனையில் ஐந்து கிலோ கஞ்சா பறிமுதல் மூன்று பேர் கைது*;

Update: 2025-09-03 14:52 GMT
விருதுநகர் அருகே வாகன சோதனையில் ஐந்து கிலோ கஞ்சா பறிமுதல் மூன்று பேர் கைது விருதுநகர் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் கருப்பன் நேற்று இரவு விருதுநகர் சிவகாசி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த காரை வழிமறைத்து சோதனை செய்ததில் அந்த காரில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது அந்த காரில் இருந்த விருதுநகரைச் சார்ந்த ஜெகன் ராஜ் (33) கோட்டைப்பட்டியை சார்ந்த விஜயசாரதி(19) குல்லூர் சந்தையை சார்ந்த ராமர் (36)ஆகிய மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் விற்பனைக்காக விசாகப்பட்டினத்தில் இருந்து ஐந்து கிலோ கஞ்சாவை வாங்கிட்டு வந்து விருதுநகர் பகுதியில் அவர்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரிகிறது இதை எடுத்து மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News