ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தனியார் மினி பேருந்தை இயக்குவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மினி பேருந்தை சிறை பிடித்து
ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தனியார் மினி பேருந்தை இயக்குவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மினி பேருந்தை சிறை பிடித்து போராட்டம்...*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தனியார் மினி பேருந்தை இயக்குவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மினி பேருந்தை சிறை பிடித்து போராட்டம்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் நகர் பகுதியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்ல சரியான பேருந்து வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமம் அடைந்து வந்த நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆரம்பித்து தென்னக ரயில்வே மதுரை கோட்டம் ரயில்வே பார்கிங் வருடத்திற்கு தலா ஒரு நபருக்கு நான்காயிரத்து நூறு ரூபாய் செலுத்தி அனுமதி பெற்று ஆட்டோ ஓட்டி தங்களது அன்றாட புழப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மினி பேருந்து இயக்கப்பட்டது இந்த மினி பேருந்து வட்டார போக்குவரத்து அலுவலக அனுமதி அட்டவணைப்படி இயக்குவதில்லை எனவும் மினி பேருந்து ஓட்டுனர் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடுமையான வார்த்தைகளால் திட்டுவதாகவும் ஆட்டோவில் பயணிகளை ஏற்றி செல்லும் போது மினி பேருந்து வைத்து விபத்துக்கள் ஏற்படும் விதமாக ஓட்டி அச்சுறுத்துவதாகவும் இதுகுறித்து காவல்துறை,வட்டா போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ஆட்டோக்கள் மீது மினி பேருந்தை வைத்து இடிப்பது போல் ஓட்டி வந்த ஓட்டுனரை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் ஒன்று கூடி மினி பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சமாதானமாக பேசி பேருந்து ஓட்டுனரை எச்சரித்து அனுப்பினர். ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆட்டோக்களை இயக்குவதாகவும் இது குறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு அனைத்து ஆட்டோ சங்கத்தினர் ஒன்று கூடி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி : போஸ் (அண்ணா தொழிற்சங்க நகர செயலாளர்)