உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து ஆய்வு கூட
உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்*;
அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் பாலவநத்தம் மற்றும் பெரிய வெள்ளிக் குளம் கிராம மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். மேலும் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து, அதிகாரிகளிடம் பொறுமையாக இருந்து மக்களிடம் மனுக்களை பெறுமாறு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பாதாள சாக்கடை பணிகள் குறித்தும் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்தும் அதிகாரிகள் உடனான தனது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைபடுத்த அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இதில் நகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.