இளம் பெண் வயிற்று வலியால் தற்கொலை.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இளம்பெண் வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்;
மதுரை உசிலம்பட்டி நடராஜ் நகர் பூக்காரத் தெருவில் வசிக்கும் செல்வராஜின் மகள் சௌந்தர்யாவுக்கும் (25) புவனேஸ்வரன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் சௌந்தர்யாவுக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்ட காரணத்தால் விரக்தியில் வீட்டில் நேற்று (செப்.3) காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் ஜெயலட்சுமி உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.