மேலமாயனூர் ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேலமாயனூர் ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.;
மேலமாயனூர் ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேல மாயனூர் மாவிலான் தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பெரிய காண்டியம்மன் ஸ்ரீ வீரமலையாண்டி ஸ்ரீ பெரியசாமி ஸ்ரீ ராசையன் ஸ்ரீ மருதவீரன் ஸ்ரீ லாட தன்னாசி ஸ்ரீ பழனியாண்டவர் ஸ்ரீ கன்னிமார் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ புடவக்காரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை இரண்டாம் கால பூஜை நடைபெற்ற பிறகு யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று சிவாச்சாரியார்கள் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக நடத்தினர். இதனை தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாதாரணையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் எம்பி ஜோதிமணி கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி அரசு ஒப்பந்ததாரர் சங்கர் உள்ளிட்ட மாயனூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அவர்களுக்கு கும்பாபிஷேக குழுவினர் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்குகினர்.