வ உ சிக்கு வீரவணக்கம் செலுத்திய நாம் தமிழர் கட்சியினர்.
வ உ சிக்கு வீரவணக்கம் செலுத்திய நாம் தமிழர் கட்சியினர்.;
வ உ சிக்கு வீரவணக்கம் செலுத்திய நாம் தமிழர் கட்சியினர். செக்கிழுத்த செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை 154 ஆவது பிறந்த நாளை பல்வேறு அமைப்புகள் இன்று கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து தாந்தோணி மலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வ உ சிதம்பரம் பிள்ளை திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி வீர வணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு வீரவணக்கம் செலுத்தி கோஷங்களை எழுப்பினர்.