மேலூரில் மாட்டுவண்டி பந்தயம்.
மதுரை மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது;
மதுரை மேலூர் எஸ் கல்லம்பட்டி, கழுவம்பாறை சுவாமி மாடு நினைவாக இளைஞர்கள் சார்பில் இன்று (செப்.5) அழகர் கோவில் ரோட்டில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாடு 18 ஜோடிகளும் சிறிய மாட்டில் 41 ஜோடிகளும் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சாலையின் இருபுறமும் ஏராளமான மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் ஆரவாரம் செய்து பார்த்தனர்.