வடகரை ஆத்தூர் ஊராட்சியில் தார் சாலை அமைக்க பூமி பூஜை.
வடகரை ஆத்தூர் ஊராட்சியில் தார் சாலை அமைக்க பூமி பூஜையை கே.எஸ். மூர்த்தி துவக்கி வைத்தார்.;
பரமத்தி வேலூர்.ஆக,5: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்தாலுகா வடகரை ஆத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் முதல் புதுப்பாளையம் வரை ரூ.91.18 லட்சம் மதிப்பீட்டில் தமிழக முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கபிலர்மலை மத்திய ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார். கபிலர்மலை ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியம், நகரம்,கிளை பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.