சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்ட அமைச்சர்
திருப்புவனம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் பெரிய கருப்பன் பார்வையிட்டார்;
திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்றையதினம் (6.9.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடைபெற்ற ”நலம் காக்கும் ஸ்டாலின்”திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவி உபகரணங்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்