கிளை நூலக கட்டிடத்தினை திறந்து வைத்த அமைச்சர்
கானாடுகாத்தான் பகுதியில் கிளை நூலக கட்டிடத்தினை அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்;
சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள கிளை நூலகத்திற்கான புதிய கட்டிடத்தினை, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தனர். உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நன்கொடையாளர் குமாராணி டாக்டர்.மீனா முத்தையா உட்பட பலர் பங்கேற்றனர்