கரூரில் காற்றுடன் கூடிய கனமழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி.
கரூரில் காற்றுடன் கூடிய கனமழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி.;
கரூரில் காற்றுடன் கூடிய கனமழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழையும் பரவலாக மிதமான மழையும் பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தை பொருத்தவரை கோடை காலம் போலவே வெயில் கொளுத்தி வருகிறது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருந்த சூழலில் இன்று மாலை கரூரை வலம் வந்த கார் மேகங்கள் திடீரென மழையாக பொழிந்தது. லேசான காற்றுடன் கரம் கோர்த்த மழை தற்போது வலுவடைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது.இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.