திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை வேளையில் திடீரென பெய்த மழையால் வியாபாரிகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*
திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை வேளையில் திடீரென பெய்த மழையால் வியாபாரிகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*;
திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை வேளையில் திடீரென பெய்த மழையால் வியாபாரிகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்த சூழலில் இன்று மாலை வேளையில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. மேலும் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பள்ளிமடம், காரேந்தல், தமிழ்பாடி, கார்த்தியப்பன் நகர், மேலக் கண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. மேலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திடீரென வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் திருச்சுழி - அருப்புக்கோட்டை சாலையில் முறையாக வாறுகால் வசதிகள் மேற்கொள்ளாததால் திடீரென பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் மழையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் தற்போது திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் விதை விதைத்துள்ள நிலையில் இன்று பெய்த மழை காரணமாக விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.