மதிமுகவில் இருந்து கூண்டோடு விலகிய நிர்வாகிகள்

மதிமுகவில் இருந்து கூண்டோடு விலகிய நிர்வாகிகள்;

Update: 2025-09-06 13:42 GMT
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மதிமுகவின் 25- நிர்வாகிகள் தங்களுடைய தனிப்பட்ட சொந்தக் காரணங்களுக்காக அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். கடந்த 21- ஆண்டுகளாக மதிமுகவில் பயணித்த தாங்கள், அக்கட்சியின் சார்பில் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் தங்களைப் பங்கேற்கச் செய்தமைக்கும், முழு ஒத்துழைப்புத் தந்தமைக்கும் மதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். தற்காலிகமாக அரசியலிலிருந்து விலகியிருக்கும் தங்களின் அரசியல் பயணம் விரைவில் திராவிடப் பாணியிலேயே தொடருமென்றனர். பேட்டி:- செல்வராஜ்- மதிமுக பொருளாளர், விருதுநகர் மாவட்டம்.

Similar News