மாநில அளவிலான யோகாசன போட்டியில் மாணவ, மாணவியர் பங்கேற்று ஆர்வமுடன் தங்களது யோகாசன திறன்களை வெளிப்படுத்தினர்...

மாநில அளவிலான யோகாசன போட்டியில் மாணவ, மாணவியர் பங்கேற்று ஆர்வமுடன் தங்களது யோகாசன திறன்களை வெளிப்படுத்தினர்...;

Update: 2025-09-06 13:43 GMT
சிவகாசியில் மாநில அளவிலான யோகாசன போட்டியில் மாணவ, மாணவியர் பங்கேற்று ஆர்வமுடன் தங்களது யோகாசன திறன்களை வெளிப்படுத்தினர்... சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் மாநில அளவிலான யோகாசனப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்கேஜி முதல் பிளஸ் டூ வரை பயிலும் மாணவ மாணவியர் 750- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பத்மாசனம், ஏகபாத சிரசாசனம், பட்சியாசனம் கலோ டாசனம் உள்பட பல்வேறு ஆசனங்களுடன், தங்களது தனித் திறமைகளையும் வெளிப்படுத்தி உடலை வில்லாக வளைத்து ஆசனங்களாக செய்து காண்பித்தனர். மதிப்பெண்கள் அடிப்படையில் தனிநபர் சாம்பியன், குழு சாம்பியன்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ராஜபாளையம் ரமணா வித்யாலயா பள்ளி அணி வெற்றி பெற்றது.

Similar News