கொல்கத்தாவில் இருந்து கூமாபட்டிக்கு நெல் நடவு விவசாய பணிக்கு வருகை தந்துள்ள நூற்றுக்கணக்கான வடமாநிலத்தினர்...

கொல்கத்தாவில் இருந்து கூமாபட்டிக்கு நெல் நடவு விவசாய பணிக்கு வருகை தந்துள்ள நூற்றுக்கணக்கான வடமாநிலத்தினர்...;

Update: 2025-09-06 13:44 GMT
கொல்கத்தாவில் இருந்து கூமாபட்டிக்கு நெல் நடவு விவசாய பணிக்கு வருகை தந்துள்ள நூற்றுக்கணக்கான வடமாநிலத்தினர்... விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வத்திராயிருப்பு பகுதி. வத்திராயிருப்பு , கான்சாபுரம், தம்பிபட்டி, கோட்டையூர் ,மகாராஜபுரம் , ரகுமத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயம் என்பது நடைபெற்று வருகிறது.வத்திராயிருப்பு பகுதியில் கோடை , காலம் என இரு முறை நெல் விவசாயம் என்பது நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தற்போது காலமுறை நெல் விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் நெல் நடவு பணிக்கு கொல்கத்தாவில் இருந்து நூற்றுக்கணக்கான வட மாநிலத்தினரை வைத்து நெல் நடவு விவசாயி பணிகளை செய்து வருகின்றனர். தமிழகத்தில் போதுமான விவசாயிகள் கிடைக்காததன் காரணமாக தற்பொழுது வட மாநிலத்தினரை வைத்து குறைந்த விலையில் நெல் விவசாய பணிகள் மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பேட்டி : 1.ராஜு ( கொல்கத்தா - புரோக்கர்)

Similar News