கரூர் ராட்சத மாலை அணிவித்து திமுகவில் இணைந்த பிஜேபியினர்.
கரூர் ராட்சத மாலை அணிவித்து திமுகவில் இணைந்த பிஜேபியினர்.;
கரூர் ராட்சத மாலை அணிவித்து திமுகவில் இணைந்த பிஜேபியினர். பிஜேபி கட்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வந்த கோபிநாத் தலைமையில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் இன்று அக்கட்சியில் இருந்து விலகி கரூர் திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு ராட்சத திமுக மாலையை தயார் செய்து அதனை கிரேனில் எடுத்து வந்து திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜிக்கு அணிவித்து திமுகவில் இணைந்தனர், திமுகவில் இணைந்த அவர்கள் பணி சிறக்க திமுக கட்சி துண்டை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி. கட்சி நிகழ்ச்சிகளை புதுமையாகவும் வித்தியாசமாகவும் நடத்தும் செந்தில் பாலாஜிக்கு கிரேனில் மாலை எடுத்து வந்து அணிவித்த நிகழ்ச்சி திமுகவினர் இடையே எழுச்சியை ஏற்படுத்தியது.