பெரிய வடுகப்பட்டி-அருள்மிகு ஸ்ரீ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பெரிய வடுகப்பட்டி-அருள்மிகு ஸ்ரீ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update: 2025-09-07 08:26 GMT
பெரிய வடுகப்பட்டி-அருள்மிகு ஸ்ரீ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா ஆத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய வடுகப்பட்டியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ எல்லமாயி அம்மன் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இன்று காலை மங்கள இசை உடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் பல்வேறு பூஜைகளும் யாகங்களும் நடத்தப்பட்டது. யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தில ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் வெகு சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர்.மேலும் ஆலய வளாகத்தில் கோ பூஜையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கும்பாபிஷேக விழா கமிட்டியினர் அன்னதானம் வழங்கினர்.

Similar News