கரூர்-வீட்டு வசதி வாரியம்-கிரையம் பெற்றவருக்கு தனிப்பட்ட வழங்கும் முகாம் நடைபெற்றது.

கரூர்-வீட்டு வசதி வாரியம்-கிரையம் பெற்றவருக்கு தனிப்பட்ட வழங்கும் முகாம் நடைபெற்றது.;

Update: 2025-09-07 08:51 GMT
கரூர்-வீட்டு வசதி வாரியம்-கிரையம் பெற்றவருக்கு தனிப்பட்ட வழங்கும் முகாம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கிரையம் பெற்றவர்களுக்கு தனிப்பட்ட வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி மாநகராட்சி மேயர் கவிதா மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முகாமில் பங்கேற்று தனி பட்டா கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த பயனாளிகளிடம் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொண்டார். மனுக்களை பரிசீலனை செய்து 15 நாட்களுக்குள் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும் என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.ஏறத்தாழ 1486 குடியிருப்புகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Similar News