மோளப்பாளையத்தில் டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து.முதியவர் படுகாயம்.

மோளப்பாளையத்தில் டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து.முதியவர் படுகாயம்.;

Update: 2025-09-07 09:33 GMT
மோளப்பாளையத்தில் டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து.முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா அத்திப்பாளையம் அருகே காமராஜ் நகரை சேர்ந்தவர் பெரியசாமி வயது 69. இவர்வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் நொய்யல் - பரமத்தி சாலையில் டூவீலரில் மோளப்பாளையம் அருகே சென்றபோது எதிர் திசையில் அருகில் உள்ள வள்ளக்குளத்து பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் வேகமாக ஓட்டி வந்த கார் பெரியசாமி டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த பெரிய சாமியை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்த பெரியசாமி மகன் விஜயகுமார் வயது 46 என்பவர் அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய பிரவீன் குமார் மீது க.பரமத்தி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News