ஆத்தூரில் சட்டவிரோத மது விற்பனை ஒருவர் கைது மது பாட்டில்கள் பறிமுதல்.

ஆத்தூரில் சட்டவிரோத மது விற்பனை ஒருவர் கைது மது பாட்டில்கள் பறிமுதல்.;

Update: 2025-09-07 10:13 GMT
ஆத்தூரில் சட்டவிரோத மது விற்பனை ஒருவர் கைது மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்துவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் ஆத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த பாரதி வயது 26 என்பவர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு அவர் விற்பனைக்கு வைத்திருந்த 24 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் பாரதி மீது கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News