சின்னதாராபுரம் - முப்பெரும் விழா குறித்து திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்.
சின்னதாராபுரம் - முப்பெரும் விழா குறித்து திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்.;
சின்னதாராபுரம் - முப்பெரும் விழா குறித்து திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம். செப்டம்பர் 17ஆம் தேதி கரூரில் திமுக முப்பெரும் விழா திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் திமுக கட்சியினர் சிறப்பாக செயல்பட கட்சி செயல் வீரர்கள்கூட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது சின்ன தாராபுரத்தில் உள்ள தனியார்கூட்டரங்கில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முப்பெரும் விழாவை இதுவரை யாரும் செய்திடாத அளவிலே சிறப்பாக நடத்திட கட்சியினர் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.