சிவகங்கை மாவட்டத்தில் மதுபான கடைகளுக்கு விடுமுறை
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது;
சிவகங்கை மாவட்டத்தில் இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு, வருகின்ற 10.9.2025 தேதியன்று சிவகங்கை மற்றும் மானாமதுரை காவல் உட்கோட்டத்தில் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட மதுபானகடைகள் மற்றும் மதுபான கூடங்களும், 11.9.2025 ஆம் தேதியன்று சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், எப்.எல்.2/எப்.எல்.3 மதுபானக்கூடங்கள் மற்றும் அதனுடன் இணைந்த ஹோட்டல்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்