கொட்டிதீர்த்த கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
கொட்டிதீர்த்த கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.;
கொட்டிதீர்த்த கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு செய்தது. ஆயினும் கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் போலவே கொளுத்தி எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் இன்று இரவு திடீரென கரூரை வட்டமடித்த கார்மேகங்கள் மழையாக பொழிந்தது. மழை பொழிந்த உடன் தீவிரம் காட்டியதால் கனமழையாக மாறியது. இதனால் நகரில் முக்கிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனால் பனி முடித்து வீடு திரும்ப நினைத்த பொது மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதித்தது. அதேசமயம் கோடையின் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.