அரவக்குறிச்சி நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு.
அரவக்குறிச்சி நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு.;
அரவக்குறிச்சி நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தும்மலைகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் வயது 78. இவர் திங்கள்கிழமை இரவு 8:45 மணி அளவில் அரவக்குறிச்சி - பள்ளப்பட்டி சாலையில் உள்ள ஒரு ஹாலோ பிளாக் கம்பெனி அருகே நடந்து சென்றபோது அந்த சாலையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஸ்ரீரங்கன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார். சம்பவம் அறிந்த ஸ்ரீரங்கனின் மகன் சின்ராஜ் வயது 50 என்பவர் அளித்த புகாரில் அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தும்மலைகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் வயது 78. இவர் திங்கள்கிழமை இரவு 8:45 மணி அளவில் அரவக்குறிச்சி - பள்ளப்பட்டி சாலையில் உள்ள ஒரு ஹாலோ பிளாக் கம்பெனி அருகே நடந்து சென்றபோது அந்த சாலையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஸ்ரீரங்கன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார். சம்பவம் அறிந்த ஸ்ரீரங்கனின் மகன் சின்ராஜ் வயது 50 என்பவர் அளித்த புகாரில் அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.