ஒரு மணி நேர கனமழையால் வெள்ளப்பெருக்கு
குமாரபாளையம் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;
குமாரபாளையம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் கொஞ்சம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை வானிலை அறிக்கை நாமக்கல் சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு வெளியானது அதனை தொடர்ந்து காலை முதலே குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் அதன் சுற்றுப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது, திடீரென மாலை லேசான சாரலுடன் ஆரம்பித்த மழை ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது ஒரு சில பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. இரைச்சலுடன் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் சாலைகளில் மழை நீர் தேங்கியதை கண்டு கொள்ளாமல் வாகனங்களை வேகமாக செலுத்தியதால், சாலைகளில், செல்பவர்கள் மீது, தேங்கிய மழை நீர் தெளித்தது. இதனால் பாதசாரிகளும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். நெல் விதைப்பு காலத்தில் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்