புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவப்பூர் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் ரயில் வருவதற்கு முன்பு கேட் மூடப்படுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, கட்டியாவயல் ஆகிய சாலைகளில் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே விரைவில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.