திருச்செங்கோட்டில் கந்துவட்டி கொடுமை இளைஞருக்கு அடி உதை போலீஸ் விசாரணை
திருச்செங்கோட்டில் கந்து வட்டிக் கொடுமை முழு தொகையை வட்டியுடன் கட்டிய பிறகும் கூடுதல் பணம் கேட்டு கந்து வட்டிக்காரர் சூரியம்பாளையம் சக்திவேல் 40 தறிப் பட்டறை தொழிலாளி முத்து 26என்பவர் மீது கடும் தாக்குதல் தறி தொழிலாளி முத்து ரத்த காயங்களுடன் அரசு மருத்துவ மனையில் அனுமதி;
திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவரது தறிப் பட்டறையில் தொழிலாளியாகவேலை பார்த்து வருபவர் செந்தில் என்பவரது மகன் முத்து 26 இவர் சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் ரூ 3 ஆயிரம் கந்து வட்டிக்கு வாங்கியுள்ளார் அதற்கு 4 ஆயிரத்து 500 ரூபாயை வட்டியுடன் செலுத்திய நிலையில் கட்டிய பணம் வட்டிக்கு சரியாகி விட்டது என்றும், மீண்டும் அசல் மற்றும் மீதமுள்ள காலத்திற்கான வட்டி அபராத வட்டி என அதிக வட்டியை கேட்டு முத்துவை மிரட்டி இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் முகம், நெஞ்சு, வயிறு மற்றும் கால் பகுதிகளில் கன்றிப் போன ரத்த காயம் ஏற்பட்ட நிலையில் முத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செங்கோடு பகுதிகளில் தறித் தொழிலாளர்களை குறி வைத்து கந்து வட்டிக்காரர்கள் மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, என கடன் கொடுத்துவிட்டு மிரட்டுவதும் அடிப்பதும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதும் நடந்து வருகிறது. இவர்களது தாக்குதலுக்கு பயந்து பலரும் வெளியே சொல்லாத நிலையில் கடும்தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ரத்தக்காயங்களுடம் முத்து அரசு மது மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறையினர் சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கந்துவட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்