கிருஷ்ணராயபுரம் பகுதியில் கடும் குளிரால் பொதுமக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் காலை 9 மணி வரை நிலவி வரும் பனிப்பொழிவு;
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் பனிப்பொழிவு அதிகரித்து வருவதால் கடும் குளிர் ஏற்பட்டு வருகிறது. இதனால் முதியோர்கள், குழந்தைகள் என பொதுமக்கள் பெரிதும் குளிர் நடுக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். மார்கழி மாதம் நாளை தொடங்க உள்ளதால் பனிப்பொழிவு அதிகரித்து இன்னும் குளிர் அதிகரிக்க கூடும் என்பதால் பொது மக்கள் மற்றும் இன்றி கால்நடைகளும் குளிரால் பாதிக்கப்பட கூடும் என கூறப்படுகிறது. மேலும் பனிப்பொழிவு காலை 9 மணி வரை நிலவுவதால் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் சரிவர வளராமல் பாதிப்படைந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.பனிப்பொழிவால் வாகனங்கள் காலை 8 மணிவரை முகப்பு விளக்குகள் எரிய விட்டவாறு செல்கின்றனர்.