கிருஷ்ணராயபுரம் அருகே சாலை விபத்து
திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் கார் மோதி மூதாட்டி படுகாயம்;
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனி பகுதியை சேர்ந்தவர் மருதை என்பவரின் மனைவி ஆவுலி (69).இவர் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணராயபுரம் யூனியன் ஆபீஸ் பகுதியில் நடந்து செல்லும் போது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஜமால் புதூர் பகுதி சேர்ந்த பஷீர் அகமத் (39) என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். விபத்து குறித்து அவரது மகன் வேம்புசாமி (45) கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்