நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் உயர் கல்வி விழிப்புணர்வு ஆலோசனை.

நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரி கல்வியான மேல் படிப்பு பற்றிய விழிப்புணர்வு ஆலோசனை வகுப்பு நடத்தப்பட்டது.;

Update: 2025-12-15 12:56 GMT
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதம் மாணவ, மாணவியருக்கு பொது தேர்வு பற்றிய பயத்தை போக்கும் விதமாகவும், அதிகமான மதிப்பெண் பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் பற்றியும் வகுப்பு நடத்தப்பட்டது, மேலும் பதினோராம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் சேர்ந்தால் என்னென்ன வேலைவாய்ப்புகள் பெறலாம் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த வகுப்பின் ஆலோசகராக கோயம்புத்தூர் எட்வைஸ் இண்டர்நேசனல் ஆலோசனை நிறுவனத்தின் ஆலோசகர் தினேஷ்குமார் நடத்தினார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு நீட் தேர்வு பற்றியும், ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு, மற்றும் கல்லூரியில் என்னென்ன பாடப்பிரிவுகள் எங்கெங்கு உள்ளது. இன்றைய காலகட்டத்தில் எந்த பாடப்பிரிவிற்கு வேலைவாய்ப்புகளும், மதிப்புகளும் அதிகம் என்பதை மிகவும் தெளிவாகவும், எளிமையாகவும் விளக்கி கூறினார். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக ஆலோசனை அமைந்தது. இந்நிகழ்விற்கு பள்ளியின் பொருளாளர் தேனருவி தலைமை ஏற்று சிறப்புவிருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார், பன்னிரெண்டாம் வகுப்ப மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாழ்வில் வளம்பெற வேண்டும் என்று வாழ்த்தினார். பள்ளி முதல்வர் ஆண்டனி ராஜ் நன்றியுரை கூறினார் ஆலோசனை வகுப்பில் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டார்கள்

Similar News