அதிக விலைக்கு மது விற்ற நபர் கைது

குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-09-12 10:21 GMT
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. பிரபாகரன் உள்பட போலீசார் பலரும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். சேலம் சாலை ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஒருவர், அதிக விலைக்கு மது விற்றுக்கொண்டு இருந்தார். நேரில் சென்ற போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் அவர் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் வசிக்கும் கூலித்தொழிலாளி மணிகண்டன், 33, என்பது தெரியவந்தது.

Similar News