பொன்னமராவதி காவல் நிலையத்துக்கு உட்பட்ட நகரப்பட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பூவரசன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ஒரு யூனிட் மணல் அனுமதி இல்லாமல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து வாகன உரிமையாளர் பொன்னமராவதியைச் சேர்ந்த விஷ்ணு மீது வழக்கு பதிந்து வண்டியை பறிமுதல் செய்தனர்.