பொருளாதார குற்றவாளிக்கு கரூரில் முதல்முறையாக குண்டாஸ்'
பொருளாதார குற்றவாளிக்கு கரூரில் முதல்முறையாக குண்டாஸ்';
பொருளாதார குற்றவாளிக்கு கரூரில் முதல்முறையாக குண்டாஸ்' கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா செம்பியநத்தம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் வயது 34. இவர் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து ரூ.3,30,000 ஏமாற்றியதாக புகார் வந்ததின் பேரில் சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 27ல் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து Innova கார், நிலப்பத்திரம் கைப்பற்றப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகத்தில் அதிகரித்து வரும் நிதி நிறுவன மோசடிகளை கருத்தில் கொண்டு ஜூலை 8-ல் பொருளாதார குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்பு காவலில் அடைக்கலாம் என்று அரசாணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக முருகேசன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கரூர் மாவட்ட எஸ்.பி.ஜோஷ் தங்கையா கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களுக்கு பரிந்துரை செய்ததின் பேரில் நேற்று 13.09.25 கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.