வெங்கமேடு- எம்ஜிஆர் கழகம் கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட செயலாளர் பெரியசாமி.

வெங்கமேடு- எம்ஜிஆர் கழகம் கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட செயலாளர் பெரியசாமி.;

Update: 2025-09-14 11:34 GMT
வெங்கமேடு- எம்ஜிஆர் கழகம் கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட செயலாளர் பெரியசாமி. மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன் தோற்றுவித்த எம்ஜிஆர் கழகம் கட்சியில் இன்று இளைஞர்கள் இணையும் நிகழ்வு கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் செயல்படும் எம்ஜிஆர் கழகம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் ராமலிங்கம் ஒப்புதலுடன் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட செயலாளர் பெரியசாமிக்கு பொன்னாடை அணிவித்து கட்சியில் இணைந்தனர். புதிதாக கட்சியில் இணைந்த அவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து கட்சி பணி சிறக்க அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் பெரியசாமி. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் சதீஷ்குமார்,வடக்கு மாநகர மாணவரணி செயலாளர் மருது பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Similar News