மயானம் அருகே டூவீலரில் வேகமாக சென்றதால் கீழே விழுந்து விபத்து.முதியவர் படுகாயம்.
மயானம் அருகே டூவீலரில் வேகமாக சென்றதால் கீழே விழுந்து விபத்து.முதியவர் படுகாயம்.;
மயானம் அருகே டூவீலரில் வேகமாக சென்றதால் கீழே விழுந்து விபத்து.முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம் ஜெகதாபி அருகே ஆனந்தகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி வயது 70. இவர் வெள்ளிக்கிழமை அன்று இரவு 11:30 மணியளவில் கரூர் - மணப்பாறை சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் உப்பிடமங்கலம் மயானம் அருகே சென்றபோது டூவீலரை வேகமாக இயக்கியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த தெய்வ சிகாமணியை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த தெய்வ சிகாமணியின் மனைவி கமலாராணி வயது 60 என்பவர் அளித்த புகாரில் வெள்ளியணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.