நின்று கொண்டிருந்தவர் மீது டூவீலர் மோதியதில் லாரி ஓட்டுனர் படுகாயம்
குமாரபாளையம் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது டூவீலர் மோதியதில் லாரி ஓட்டுனர் படுகாயமடைந்தார்.;
குமாரபாளையம் அருகே சேலம் மாவட்டம் புள்ளாக்கவுண்டம்பட்டியில் வசிப்பவர் இயேசு ராஜா, 36. லாரி ஒட்டுனர். இவர் நேற்றுமுன்தினம் வட்டமலை பஸ் நிறுத்தம் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஹோண்டா ஷைன் வாகனம் இவர் மீது மோதியதில், பலத்த காயமடைந்தார். இவர் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்துக்கு காரணமான ஹோண்டா சைன் வாகன ஓட்டுனர் சேலத்தை சேர்த்த சரவணன், 35, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.