மேயர் தலைமையில் திமுகவினர் உறுதிமொழி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுகவினர் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என உறுதிமொழி ஏற்றனர்.;
தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க நமது ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் பூத் வாரியாக தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினரும் சேர்ந்து, 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ என உறுதி ஏற்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார் அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் போல்பேட்டை பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுகவினர் அலங்கரிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக நிற்பேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், பகுதி இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், சுடர் வடிவேலன், முத்து, தனசேகர், சின்னமலை, உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்