கரூர்-பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ்-கரூரில் பாமகவினர் கொண்டாட்டம்.
கரூர்-பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ்-கரூரில் பாமகவினர் கொண்டாட்டம்.;
கரூர்-பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ்-கரூரில் பாமகவினர் கொண்டாட்டம். நடந்து முடிந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் மேலும் ஒரு ஆண்டுக்கு பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ்-ஐ நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததை பரிசீலித்த தேர்தல் ஆணையம் இன்று அங்கீகாரம் செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் தலைமையில் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கரூர் கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.