நாற்றங்காலில் புதிய நோய் தாக்குதல் வேளாண்மைத்துறையினர் நேரில் ஆய்வு

குமாரபாளையம் அருகே நாற்றங்காலில் புதிய நோய் தாக்குதல் ஏற்பட்டதால் வேளாண்மைத்துறையினர் நேரில் ஆய்வு;

Update: 2025-09-15 11:40 GMT
குமாரபாளையம் அருகே நாற்றங்காலில் புதிய நோய் தாக்குதல் ஏற்பட்டதால் வேளாண்மைத்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது: குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில்,,பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது, நாற்றுகள் நட, நாற்றுகள் விட்டுள்ளனர். இவைகள் உரிய அளவில் வளர்ந்து, நாற்றுகள் நட, தயாரான நிலையில் உள்ளன. இந்நிலையில் நாற்றுகளில் சிவப்பு நிறம் படர்ந்து, புதிய நோய் பரவி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். பயிர்கள் நட, தயாரான நிலையில் இது போல் நாற்றுகள் புதிய நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதால், செய்வதறியாது உள்ளனர். பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர் நடவு பணிகள் இதனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் கவலையை போக்கவும், பயிர்கள் நடவு செய்யவும் உரிய நடவடிக்கையை வேளாண்மை துறை அதிகாரிகள் உடனே எடுக்க வேண்டும்.என கோரிக்கை விடுத்தோம். அதன்படி உதவி வேளாண்மைத்துறை இயக்குனர் மாயஜோதி, துணை வேளாண்மை அலுவலர் நிஷா, வேளாண்மை உதவி இயக்குனர் சத்திய பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இவ்வாறு அவர் கூறினார். உதவி வேளாண்மைத்துறை இயக்குனர் மாயஜோதி கூறியதாவது: இது நாற்றங்காலில் ஏற்படும் சாதாரண நோய்தான். இதற்கு உரிய மருந்து தெளிக்க சொல்லி கூறியுள்ளோம். உரிய நேரத்தில் இந்த நாற்றங்கல்களை எடுத்து பயிர் நடவு செய்யலாம். இதனால் பயிர் நடவு பணியில் பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News