குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!
177 குழந்தைகளுக்கு அடையாள அட்டை மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று வழங்கினார்.;
வேலூர் மாவட்டத்தில், 'அன்பு கரங்கள்' திட்டத்தின் கீழ், 177 குழந்தைகளுக்கு அடையாள அட்டை மற்றும் கல்வி உபகரணங்களை, மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று வழங்கினார். வேலூர், ஜே.பி.எம். திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் மோனா பாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.