வள்ளுவர் நகர் அருகே டூவீலர்கள் மோதல் மூதாட்டி படுகாயம்.

வள்ளுவர் நகர் அருகே டூவீலர்கள் மோதல் மூதாட்டி படுகாயம்.;

Update: 2025-09-16 08:06 GMT
வள்ளுவர் நகர் அருகே டூவீலர்கள் மோதல் மூதாட்டி படுகாயம். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பூலம் வலசு வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன் வயது 46. அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மனைவி மருதாயி வயது 75 என்பவரை அழைத்துக் கொண்டு டூவீலரில் கரூர்- திண்டுக்கல் சாலையில் புதன்கிழமை காலை 10:30 மணி அளவில் வள்ளுவர் நகர் அருகே சென்றபோது அதே சாலையில் பின்னால் வந்த சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா சொட்டையங்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த தனபால் வயது 42 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் ஜெகதீசன் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பின்னால் அமர்ந்து வந்த மருதாயிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை பாண்டிச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக ஜெகதீசன் அளித்த புகாரில் அரவக்குறிச்சி காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய தனபால் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News