கூலித்தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது
திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறித்த வாலிபர் கைது;
திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி தாஸ் என்பவர் கொட்டபட்டி - பொன்னுமாந்துறை ரோடு ஆலங்குளகரை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பொன்னுமாந்துறை, புதுப்பட்டியை சேர்ந்த அன்பழகன்(எ) காடு(23) என்பவர் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து சட்டைப் பையில் வைத்திருந்த ரூ.1000 பணத்தை பறித்து சென்றதாக அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட அன்பழகன் (எ) காடு-ஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.