வாங்கல் அருகே வேலைக்குச் சென்ற இளைஞன் வீடு திரும்பவில்லை மகனை காணவில்லை தாயார் புகார்,

வாங்கல் அருகே வேலைக்குச் சென்ற இளைஞன் வீடு திரும்பவில்லை மகனை காணவில்லை தாயார் புகார்,;

Update: 2025-09-16 08:36 GMT
வாங்கல் அருகே வேலைக்குச் சென்ற இளைஞன் வீடு திரும்பவில்லை மகனை காணவில்லை தாயார் புகார், கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா 16 கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி பழனியம்மாள் வயது 47. இவரது மகன் சுப்பிரமணியன் வயது 21. இவர் தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட் ஆக வேலை பார்த்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை 8:30 மணி அளவில் வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் தனது மகனை காணவில்லை என பழனியம்மாள் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட வாங்கல் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மாயமான சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்

Similar News