கரூர் மாவட்டத்தில் மூன்று மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் மூன்று மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.;
கரூர் மாவட்டத்தில் மூன்று மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமான மற்றும் மிதமான மழையும் பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ந்து நான்கு நாட்கள் மழை பெய்து பிறகு மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு வானிலையில் ஏற்பட்ட சிறிய மாற்றம் காரணமாக கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் 2 மில்லி மீட்டர் தோகை மலையில் 1 மில்லி மீட்டர் என மொத்தம் மூன்று மில்லி மீட்டர் மழையளவு பதிவானது. இதனுடைய சராசரி அளவு 0.25 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.