பெயிண்ட் ஏற்றி சென்ற லாரி விபத்து
வேடசந்தூரில் பெயிண்ட் ஏற்றி சென்ற லாரி விபத்து;
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டியில் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்னால் சேலத்தில் இருந்து மதுரையை நோக்கி பெயிண்ட் ஏற்றி சென்ற லாரி மோதி விபத்து. இதில் லாரியில் இருந்த பெயிண்ட் ரோட்டில் கொட்டி இருந்தது. அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர். இதனை பார்த்த வேடசந்தூர் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் காவலர் ராஜேந்திரன் களத்தில் இறங்கி பெயிண்டை அப்புறப்படுத்தி மேலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்தில் சிக்காமல் பாதுகாத்தார். காவலர் ராஜேந்திரனின் செயலை அப்பகுதியினர் பெரிதும் பாராட்டி சென்றனர்.