அங்கன்வாடி மையத்தை ஆக்கிரமிக்கும் மதுபிரியர்கள்
திண்டுக்கல்லில் அங்கன்வாடி மையத்தை ஆக்கிரமிக்கும் மதுபிரியர்கள்;
திண்டுக்கல் AMC-ரோடு அஸ்வின் ஸ்வீட்ஸ் எதிர்புறம் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆக்கிரமிக்கும் மதுபிரியர்கள். பாரதியாரின் "பாரத தேசம்" பாடலில், "பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்" என்று வரும் வரிகள், இதன் பொருள், கல்விக்கூடங்களை கோயில்களாக உயர்த்தி மதிப்போடு கருதுவோம் என்பதாகும் ஆனால் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் அச்சத்துடன் இருக்கும் நிலைமையும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. விரைவில் இந்த அங்கன்வாடி மையத்தை மது பிரியர்கள் மினிபாராக மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.