போடி பகுதியை சேர்ந்த ராணி (47) மற்றும் இவரது உறவினர் பூமாரி (45) போடி அணைக்கரைப்பட்டி விளக்கு அருகே நேற்று (செப்16 )நடந்து சென்றனர். அப்போது போடியில் இருந்து தேனி நோக்கி சென்ற இரு சக்கர வாகனம் இவர்கள் மீது மோதியதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து போடி காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை ஒட்டிய ராமேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.